உழவுத் தொழிலை உயர்த்திடுவோம் !
ஏறுகலப்பை இல்லையின்னா நாமுங்க
எந்தக் காரியமும் நடத்த முடியாதுங்க
ஏழைபணக் காரரிங்கு இல்லீங்க
எல்லாருமே இங்கே ஒன்னுதானுங்க !
ஆமா ! எல்லாருமே இங்கே ஒன்னுதானுங்க !
காடுகரைய செழிக்க வச்சது யாருங்க ..?-நம்ம
கண்ணாத்தாளும் முருகப்பனுந் தானுங்க
காலை மாலை உங்களுக்குப் பாடுபட்டாங்க -அவுங்களை
கண் கலங்காமலே பாதுகாக்க வேணுங்க !
காலு கையி சகதிசேறு தானுங்க -அந்த
காத்தாயி உழைச்சாத்தான் சோறுங்க
காடுகழனி நிறைஞ்சிடத்தான் வேணுங்க
காலம் போற்ற உழவுத் தொழிலை உயர்த்துங்க !
வற்றாத ஆறு நிறைய ஓடுதுங்க -அதை வச்சு
வளமான உழவுத் தொழிலை உயர்த்துங்க
வடக்கு தெற்கு என்றுதானே பார்க்காம -இந்த
வையமெலாம் வாழ்த்த நீங்க உயர்த்துங்க !!
மரங்களை வளர்ப்போம் நண்பா !
நல்லது செய்திட வேண்டும் வேண்டும்
நண்பா நண்பா
நல்லதை இன்றே செய்திட வேண்டும்
நண்பா நண்பா
நாடும் வீடும் வாழ்ந்திடத்தானே
நண்பா நண்பா
நாலு மரங்களைத்தானே வளர்த்திட வேண்டும்
நண்பா ! நண்பா !
நிழல்தர மரமும் மழைதர மரமும்
வேண்டும் நண்பா
நினைத்திட வேண்டும் மரங்களை வளர்த்திட
நண்பா நண்பா
நீயும் நானும் சேர்ந்து உழைப்போம்
நண்பா நண்பா
நீண்டு அகன்ற மரங்களை வளர்ப்போம்
நண்பா ! நண்பா !
நுண்ணிய அறிவால் உயர்ந்திட வேண்டும்
நண்பா நண்பா
நுட்பம் நிறைந்த மனிதர்கள் சொல்வதை
கேட்டிடு நண்பா
நூற்றுக் கணக்கிலே மரங்களை நடுவாய்
நண்பா நண்பா
நூலோர் சொன்ன வளங்களை காண்போம்
நண்பா ! நண்பா !
நெற்றியில் வேர்வை சிந்த உழைத்தால்
நண்பா நண்பா
நெல்லும் மணியும் குவிந்திடு மிங்கே
நண்பா நண்பா
நேரும் துன்பம் எல்லாம் நீங்கும்
நண்பா நண்பா
நேர்த்தியாகவே வாழ்ந்திடலாமே
நண்பா ! நண்பா !
அதனால்...
நல்லது செய்திட வேண்டும் வேண்டும்
நண்பா நண்பா
நல்லதை இன்றே செய்திட வேண்டும்
நண்பா ! நண்பா !!
நாடும் வீடும் வாழ்ந்திடத்தானே
நண்பா நண்பா
நாளும் மரங்களைத்தானே வளர்த்திடுவோமே
நண்பா ! நண்பா !!
சேகரிப்போம் மழை நீரை !
சேர்த்திடுவோம் சேர்த்திடுவோம் செர்த்திடுவோமே
சேர்ந்துவரும் மழை நீரை செர்த்திடுவோமே
சேகரிப்போம் சேகரிப்போம் சேகரிப்போமே
சேத்துக்குள்ளே போகாமத்தான் சேகரிப்போமே !
வீத்யோடி வீணாப் போகும் தண்ணீரைத்தானே
வீட்டுக்குள்ளே தொட்டிகட்டி தேக்கி வைப்போமே
வீண்வம்பு வெட்டிப்பேச்சு பேசாமத்தானே
விபரமாகத் தண்ணீரைத்தான் சேர்த்து வைப்போமே !
நேற்ற்மின்றும் காலமொன்று போலிருக்குமா ..?
நெனச்சதெல்லாம் நடக்குமென்று நம்ப முடியுமா.. ? (!)
நேரில் வரும் மழைநீரை சேர்த்து வைக்காம
நேரும் துன்பம் அத்தனையும் போக்க முடியுமா ? (!!)
நாடும் வீடும் நல்லபடி இருந்திடத்தானே
நாமெல்லோரும் சேர்ந்துதானே உழைத்திடுவோமே
நம்ம தமிழகத்து முதல்வரம்மா சொன்னதைக் கேட்டு
நாம தலைவணங்கி ஏற்றுத்தானே செயல்படுவோமே !
சிறுதுளியாய் சேர்த்துவைத்த மழை நீரைத்தானே
சிக்கனமா செலவழிக்க முயன்றிடுவோமே
சிரமங்களை வருமுன்னே தடுத்திடுவோமே
சிக்கலெல்லாம் போக்கி நாம மகிழ்ந்திடுவோமே !!
ஆமா !சிக்கலெல்லாம் போக்கி நாம மகிழ்ந்திடுவோமே !!
No comments:
Post a Comment