எங்கள் காஷ்மீர் !
காஷ்மீர் எங்கள் உடமை என்போம்
கார்க்கில் எங்கள் எல்லை என்போம்
காவல் செய்வது கடமை என்று
காத்திட எல்லோரும் வாருங்கள் !
இந்து இஸ்லாம் கிறித்தவரோடு
இனிய சீக்கியரும் இங்கே
இணைந்தே ஒன்றாய் நின்றே நாமும்
இந்திய தேசம் காப்போம் !
பாகிஸ்தானே பாகிஸ்தானே
பாரதத்தோடு மோதாதே
பாரதத்தோடு மோதிப் பார்த்தால்
பாழாய்ப் போவாய் மறவாதே !
எதிரிகளாக இங்கே நுழைந்தால்
எப்போதும் விடமாட்டோம்
எதிர்த்தே வந்தால் எவரையுந்தானே
எட்டி உதைத்திடுவோம் !
எல்லை காக்கும் போரில் இங்கே
எத்தனை வீரர் மாண்டார்..(?)
எல்லோரும் எம் சோதரர் அன்றோ (!)
எங்கள் வீர வணக்கம் !!
எங்கள் வீர வணக்கம் !
எங்கள் வீர வணக்கம் !
எங்கள் வீர வணக்கம் !
எங்கள் வீர வணக்கம் !!
அன்னையின் கரங்களில்
அன்னை பாரத அன்னை
அவள் கரங்களில் எத்தனை முல்லை
அண்ணல் காந்தியை தந்தாள்
அம்பேத்கார் கண்டு மகிழ்ந்தாள் !
வீரம் நிறைந்த நேதாஜி
விவேகமான வல்ல பாய்படேல்
தீரமிக்க நல்ல திலகர்
கப்போலோட்டிய வ.உ.சிதம்பரம்
லாலா லஜபதி மோதிலால்
ஜெயப்ரகாசும் மோரார்ஜியும்
கவிக்குயில் சரோஜினியும்
ஆச்சார்ய கிருபளானியும்
நேரு பிரானும் நந்தாவும்
ராஜாஜியும் நிஜலிங்கப்பாவும்
அறிவு நிறைந்த அசோக்மேத்தா
பகத்சிங் வீர வாஞ்சியும்
சுப்பிரமணிய சிவாவுமே-கொடி
காத்த திருப்பூர் குமரனும்
புரட்சிக் கவிஞன் பாரதியும் -எங்கள்
கறுப்புக் காந்தி காமராஜரும்
இந்தியம் காத்திடப் பாடுபட்டார் ;
இனிய சுதந்திரம் வாங்கித் தந்தார் !-அதை
இன்னல் பட்டேனும் காத்திடுவோம் ;
இன்பமாய் எல்லோரும் வாழ்ந்திடுவோம் !!
எங்கள் பாரதம் என்றிடுவோம்
எல்லோரும் ஒன்றாய் நின்றிடுவோம் !
எங்கள் பாரதம் என்றிடுவோம் -என்றும்
எல்லோரும் ஒன்றாய் நின்றிடுவோம் !!
No comments:
Post a Comment