இறைவன் என்பவன் இருக்கின்றானடா
இதயமுள்ள மனிதனோடு வாழ்கின்றானடா
மனிதன் என்பவன் இருக்கின்றானடா
மனதில் கருணை உள்ளவனே மனிதன தானடா !
மனிதன் என்பவன் என்ன சொல்கிறான்...?
உண்மை மனிதன் என்பவன் என்ன சொல்கிறான்...?
மனிதத் தன்மை உள்ளவன் என்ன சொல்கிறான் ...?
மதிப்பு மிகுந்த மனிதனே என்ன சொல்கிறான்...?
என்ன சொல்கிறான்...? என்ன சொல்கிறான்...?
சாதி இல்லை மதமுமில்லை ஒன்றுமில்லையே
சண்டை செய்யும் யாரும் எனக்கு உறவு இல்லையே
சமயமென்னும் பேரைச் சொல்லி சங்கடம் செய்து
சதிகள் செய்யும் யாரும் எனக்கு தேவையில்லையே ! (தேவை...)
சாமி என்று சொல்வதிலே தவறு இல்லையே -அந்த
சாமி பேரில் கலகம் செய்தல் முறையுமில்லையே !
ஆசாமிகள் புனிதங்களை கேடுத்திடலாமா... ?-அதற்கு
ஆமாம் சாமி போட்டுக்கிட்டு உடன்படலாமா...? (உடன்...)
சாதி வெறியில் வீழ்ந்திடாமல் எழுந்து நில்லடா -அந்த
சாக்கடையில் வீழ்ந்துவிட்டால் நாற்றம் தானடா !
சிந்தனைகள் செய்திடவே வேண்டும் நீயடா-நல்ல
சாதனைகள் செய்து தினம் உயர்ந்து செல்லடா !! (உயர்ந்து...)
No comments:
Post a Comment