காந்தியடிகள் சொன்ன மந்திரம் ...
கருணையுள்ள அகிம்சை மந்திரம் !
தேசமெல்லாம் போற்றும் மந்திரம் ...
தேச மக்களையே இயக்கும் எந்திரம் !!
எத்தனைபேர் இரத்தம் சிந்தி வந்த சுதந்திரம் ...
எத்தனையோ தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் !!
ஏழைகளும் கோழைகளாய் ஆகிடாமலே -என்றும்
ஏற்றம் பெற எல்லோருக்கும் கிடைத்த சுதந்திரம் !!
சுதந்திரம்!சுதந்திரம்!!சுதந்திரம்!!!
சுதந்திரம்!சுதந்திரம்!!இனிய சுதந்திரம்!!!
வெள்ளையரை விரட்டியடித்து பெற்ற சுதந்திரம்
தொல்லை நீங்கி உரிமை காக்க வந்த சுதந்திரம்!-அதனால் ..
கொள்ளையடிக்க எவர்க்குமில்லை இங்கு சுதந்திரம் (!!)-நல்ல
கொள்கை வழியில் ஒன்றுபட்டு உயர சுதந்திரம் !! (சுதந்திரம்...)
ஊழல்களை செய்பவர்கள் திருந்திட வேண்டும் ...
ஊதாறித் தனங்களையே நிறுத்திட வேண்டும்!
ஊருலகம் போற்றிடவே நடந்திட வேண்டும் -தினம்
ஊக்கமாக தானுழைத்து உயர்ந்திட வேண்டும் !! (சுதந்திரம்...)
பண்பாடுகளை என்றும் நாமே காத்திட வேண்டும்
பயங்கர வாதங்களை விரட்டிட வேண்டும்!
பயமில்லாத அமைதி வாழ்க்கை நிலவிட வேண்டும்-நம்
பாரதத்தை உயர்த்தி நாமும் நிமிர்ந்திட வேண்டும் !! (சுதந்திரம்...)
சுதந்திரம்!சுதந்திரம்!!சுதந்திரம்!!!
சுதந்திரம்!சுதந்திரம்!!இனிய சுதந்திரம்!!!
No comments:
Post a Comment