Tuesday, August 31, 2010

பார் போற்றும் எங்கள் பாரத நாடு !

பாருக்குள் உயர்ந்தது எங்கள் நாடு
பார் போற்றும் பைந்தமிழர் வாழும் நாடு
பசுமையாய் பயிர்கள் தழைத்த நாடு-எங்கள் 
பாரத நாட்டுக்கு ஏதிங்கு ஈடு ! (?)

தித்திக்கும் தேன் தமிழ் தோன்றிய நாடு
திவ்விய தெலுங்கினை போற்றிடும் நாடு
தெள்ளிய கன்னட மொழி பாடும் நாடு
தேமதுரமாய் மலையாளம் பாடிடும் நாடு !

இந்தியும் குஜராத்தி வங்காளியும்
அஸ்ஸாமி பஞ்சாபி பீகாரியும் இன்னும்
எத்தனை மொழிகளோ பேசும் நாடு
என்றாலும் இங்கில்லை வேறுபாடு !   

இந்து இஸ்லாம் கிறித்து மதம்
இன்னும் எத்தனை மதங்களிருந்த போதும்
இனிமையாய் ஏற்றது சம்மதமே -ஆம்
எல்லோரும் இங்கே ஓர் குலமே !

வடக்கென்றும் தெற்க்கென்றும் இருந்த போதும்
வாழ்வதில் எல்லோரும் இந்தியர்தான் !
அத்தனை பேர்களும் சேர்ந்தோம்  ஒன்று
அதனாலே வியக்குது அகிலம் இன்று !!

No comments:

Post a Comment