அண்ணல் காந்தியின் எண்ணங்கள்
இனிய கீதை குரான் பைபிள் எதனை நோக்கினும்
இறைவன் ஒன்று என்றுதானே எனக்கு தோன்றுது
இறைவன் என்பான் மேலுமில்லை கீழுமில்லையே
இருப்பதெல்லாம் உங்களது இதயத்தில் தானே !
மதங்களெல்லாம் சரிசமமே என்று எண்ணினால்
மனங்களெல்லாம் உயர்ந்ததென்று என்றும் சொல்லுவேன்
மனிதனாகப் பிறந்த எவரும் செய்யும் சேவையில்
மகிழ்வுடனே இறைவனைத்தான் காண நினைக்கிறேன்
எப்படியோ சுதந்திரந்தான் அடைந்தோம் என்று நீ
எல்லாக் காரியமும் நடந்திடவே அரசினைத்தானே
எதிர்பார்ப்பதுடன் குறைகளையும் சொல்லுவ தெல்லாம்
எதற்கும் நாமே லாயக்கில்லை என்பதேயாகும் !
பலம் நிறைந்த மனிதனுக்கும் பலம் குறைந்த மனிதனுக்கும்
பாரபட்ச மின்றி சம வாய்ப்பளிக்கும் அரசுதான்
பாரதத்தின் உண்மையான மக்களரசு என்று
பாரெலாமே கேட்டிடத்தான் உரக்க நானும் சொல்லுவேன்
தேச சொத்தை வீணடிக்க உரிமை நமக்கு இல்லையே
தேசம் உயர சிக்கனத்தை கற்றுக்கொள்ள வேண்டுமே
தெளிவுடனே உங்கள் உள்ளம் என்றும் இருந்தால்
தேச பக்தரென்று உங்களைத்தான் சொல்லிடலாமே !
ஆயுதங்கள் ஏந்திடாமல் அகிம்சை வழியிலே
ஆங்கிலேயனை எதிர்த்து போர் புரிந்தான்
ஆயிரங்கள் இன்னலுற்று விடுதலை பெற்றார்
ஆதலாலே அண்ணலை நாம் தந்தை என்கிறோம் !
அண்ணல் காந்தி சொல்லிவைத்த பாதையில் சென்று
அர்த்தமுள்ள மனிதனாக வாழ்ந்திடு வோமே
அனைவரையும் நம்மவராய் எண்ணிடுவோம் -தேசம்
அமைதி காண என்றுந்தானே உழைத்திடுவோமே !!
No comments:
Post a Comment