மாவீரன் நேதாஜி !
வெற்றி வெற்றி என்ற சொல்லை
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
தோல்வியுறச் செய்தவன் !
காங்கிரசில் எத்தனையோ
கருத்து மோதல் இருந்தபோதும்
கவலையின்றி முழக்கமிட்டு
கம்பீரமாய் நின்றவன் !
ஜனநாயக நெறிமுறையை
அன்றைக்கே சொன்னவன் -ஆம்
ஜனநாயக வழியினிலே
வெற்றி முழக்கமிட்டவன் !
வெற்றி என்ற சொல்லை மட்டும்
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
துடைத்தெறியச் செய்தவன் !
ஐ என் ஏ என்ற சொல்லால்
ஆதிக்க வெறியர்களை
ஆட்டம் காண வைத்திட்ட
ஆற்றல்மிகு தளபதியே !
ஆம் !
நேதாஜி என்று சொன்னால்
வீரம்தான் நினைவில் வரும்
உன் உருவத்தைப் பார்த்தாலே
உணர்ச்சிகள்தான் பொங்கி வரும் !
எழுச்சிமிக்க இளைஞர்களை
உருவாக்கித் தந்ததாலே
எழுச்சியோடு இன்னமுந்தான்
நெஞ்சமெல்லாம் வாழ்கிறார் !
சாதி மத பேதங்களை
சாக்கடைக்குள் எரிந்ததாலே
சாகசங்கள் செய்து இன்னும்
சாதனையாய் நிற்கிறார் !
தேச விடுதலைக்கு குரல் கொடுத்து
போர் முழக்கம் செய்தபோது
மென்மையான பெண்களையும்
வீர முழக்கமிட வைத்தவர் !
ஜான்சிராணி படையினிலே
தளபதியாய் முழக்கமிட்ட
வீரத்தாய் லட்சுமிசேகல்
வாழும் நாட்டில் வாழ்கிறோம் !
நேதாஜி ! நீ
வெள்ளையனை மிரள வைத்த
சிம்ம சொப்பனம் !
வேறுபாட்டை ஓட வைத்த
எங்கள் தேச அர்ப்பணம் !!
உன் உரத்த வார்த்தையெல்லாம்
இன்னும் கேட்குது !
உந்தன் பேரைச் சொன்னாலே
வீரம் பிறக்குது !!
தலைவா !
உங்களுக்கு நாங்கள் செய்யும்
நன்றி ஒன்று தான்
நமது நாடு நமது மக்கள்
என்று சொல்லுவோம் !
நல்லவராய் சாதி மதச்
சண்டை நீங்கியே
நாடு போற்ற ஒன்றுபட்டு- நாங்கள்
வாழ்ந்து கட்டுவோம் !!
No comments:
Post a Comment